ரா. கிருஷ்ணசாமிநாயுடு




R.KrishnasamyNaidu
ரா.கி என்றழைக்கப்படும்

(சனவரி 5 - 1902 - அக்டோபர் 30, 1973) 

இந்திய அரசியல்வாதி. விடுதலைப் போராட்ட வீரர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து
 சென்னை மாநிலத்தின் முதல் சட்டமன்றத்திற்க்கு 
1952 இல் எதிர்கோட்டைதொகுதியில் இருந்தும் 
தமிழ்நாடு சட்டசபைக்கு 1957 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும், 
1962 இல் ராஜபாளையம் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் கிராமத்தில்
1902 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். 
நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று பின்
 பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார்.
 இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர்.
 1922-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார்.
 1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம், 
1942 இல் ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின் போது சிறை சென்றார்.
 
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை
 போட்டியிட்டு பெரும வெற்றி பெற்றார்.

 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும்,
 1968 முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.
 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் 
பல பொறுப்புகளை வகித்து இறுதியில்
 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார்.
அன்றைய இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் 
தலைவராக காமராஜ் இருந்தபோது
 ரா.கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார்.
 1959 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்
 பொதுச் செயலாளராகவும்,
 1962 முதல் 1967 வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மும்முறை வெற்றி பெற்றார். 
15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தார்.
 அவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை
 மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார்.
 பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுபணத்தை எவ்வாறு 
செலவிடவேண்டும் என்பது குறித்து
 ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்கையின் முக்கியமான செய்தி.
 காந்தியடிகளின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில்
 காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் 
என காமராஜர் புகழாரம் சூட்டினார்.
வினோபாவின் பூமி தானக் கொள்கைக்காக
 ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு
 தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார்.

 கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.




RK CHARITABLE TRUST
 a/c no 120027900081
 CANARA BANK 
ACHCHANDAVILTHAN
 IFSC Code: CNRB0003755
 MICR Code: 626015503 ,
 6/79,MIDDLE STREET 
 A RAMALINGAPURAM, 
 VIRUDHUNAGAR DIST 
TAMIL NADU-626137 
Tel No:9489046223 Fax No:1 
Email ID:cb3755@canarabank.com 
Foreign Exchange/SWIFT Code: CNRBINBBBFD 

GOVT. OF INDIA
INCOME TAX DEPARTMENT 
Permanent Account Number Card AAFTR2397N 
 RK CHARITABLE TRUST 
 Date of Incorporation/Formation 08/02/2024