தியாகி ரா. கிருஷ்ணசாமி நாயுடு

தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படாத வகையில் சுதந்திர போராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தமர் தலைவர்
பிறப்பு : ஜனவரி 5 1902
இறப்பு : அக்டோபர் 30 1973
நாணய விளக்கே ! ஓயா நற்பணிக் குன்றே ! என்றும்
ஆணவமில்லா வேந்தே !
அயர்வில்லா தேசபக்தி.
நீணெடுங்காலம் கொண்டோய் !
நீ எமை விட்டுச் சென்று
நாணடந்தாலும் நாங்கள்
நாளெல்லாம் நினைப்போம் உன்னை.
கவிஞர் கண்ணதாசன்
சேவையில் தொண்டராகி தியாகத்தால் தலைவராகி
பார்வையில் எளிராகி பண்பில் உயர்ந்தோராகி
நாவையும் காப்போராகி நாவண்மை மிக்கோராகி
தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள்ராகி
ராகி கையொப்பம் 1925 ல்
ராகி கையொப்பம் 1972 ல்
1902ம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
நான்காம் வகுப்பு வரையில் பள்ளிகல்வி பின்
பல அறிஞர்களை அணுகி முயன்று கல்வி கற்று புலவரானார்.
இசைஞானமும், பக்தியும் மிகுந்தவர்