Posts

ரா. கிருஷ்ணசாமிநாயுடு

Image
R.KrishnasamyNaidu ரா.கி  என்றழைக்கப்படும்   ரா. கிருஷ்ணசாமி நாயுடு   (சனவரி 5 - 1902 - அக்டோபர் 30, 1973)  இந்திய அரசியல்வாதி. விடுதலைப் போராட்ட வீரர். இந்திய தேசிய காங்கிரஸ்  கட்சியில் இருந்து   சென்னை மாநிலத்தின்  முதல் சட்டமன்றத்திற்க்கு  1952 இல் எதிர்கோட்டைதொகுதியில் இருந்தும்  தமிழ்நாடு சட்டசபைக்கு 1957 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும்,  1962 இல்  ராஜபாளையம்  தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   ஸ்ரீவில்லிபுத்தூர்   வட்டம் புது.ராமச்சந்திரபுரம் கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.  நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று பின்  பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார்.  இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர்.  1922-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார்.  1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம்,  1942 இல் ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின் போது சிறை சென்றார்.   தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை  போட்டியிட்டு பெரும வெற்றி பெற்றார்.  1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும்,  19