ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி. டி.கே.சி. அவர்களின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம்பெற்றுவிட்டது. தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் பி.எஸ்.குமாரசுவாமி ராஜா ஆவார். தற்போதைய தமிழக அரசு சின்னம் 1956ல் அறிமுகப் பட்டது அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. பிறகு 1968ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் உயரம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது. 


ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருப்பணி. சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இராஜகோபுரம் காலப்போக்கில் விமானத்தில் கலைநயமிக்க சிற்ப்பங்கள் சிதலமடைந்து விழுந்தும் கோபுரங்களில் விரிசல்கள் தோன்றின. 1964ல் அப்போதய முதலமைச்சர் திரு பக்தவச்சலம் அவர்கள் ஸ்ரீ ரா.கி.தலைமையில் திருப்பணிக்குழு அமைத்து




அரசு வல்லுநர் குழு கோபுரத்தை ஆய்வு செய்ய பணித்தார். கோபுரத்தின் விமானம் அதிக விரிவான தோற்றத்துடனும் அதிக எடைகொண்டதுமாகும். கோபுரத்தின் பதினோறு நிலைகளில் உள்ள மரதூண்கள், தாங்கிகள், பல கலைநயமிக்க மரசிற்ப்பங்கள் சேதமுற்றும் மேல்நிலைகளில் உள்ள சுவர்களில் சுதை பெயர்ந்து வலுவிழந்தும்,கோபுரத்தின் அடிவாரத்தை சுற்றிலும் அகழி போன்ற கழிவு நீரோடையில் நீர் தேங்கியதால் கோபுரத்தில் விரிசல் ஏற்ப்பட்டதாக அறிந்தனர். கோபுரத்தில் காற்றுவிசை யந்திரம் கொண்டு பல துளையிட்டு சிமிண்ட்காங்க்ரீட் கலவை செலுத்தி பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.பின் பல கட்டங்களில் சீரமைப்புபணி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்

பொதுவாக அனைத்து கோவில்களிலும் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக தேர் இருக்கும். ஆனால் ஆண்டாள் கோவிலில் பெருமாளும், அம்பாளும் ஒரு சேர மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இந்த கோவிலில் ஒரே தேரில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் எழுந் தருளுகின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு ஆகும்.
ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறும். இதற்காக வைகாசி மாதம் தேரை சரி செய்யும் பணி தொடங்கி விடும். இதையடுத்து அலங்கார
அந்த காலத்தில் தேரோட்டம் தொடங்கி நிலைக்கு வர 3 மாதங்களுக்கு மேல் ஆகும். காலப்போக்கில் முறையாக பராமரிக்கப் படாததால் தேர் 18 ஆண்டுகளாக ஓடாமல் இருந்தது.
தேக்கு மரங்கள்  ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டு  9 சக்கரங்களுடன் தேர் சீரமைக்கப்பட்டு 1974-ம் ஆண்டு தேரோட்டம் மீண்டும் தொடங்கியது. தேரோட்டத்தின் போது உச்சியிலிருந்த கும்பக் கலசம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. 
1986-ம் ஆண்டு இந்த தேருக்கு 4 பக்கமும் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டன. . 
ஹைட்ராலிக் பிரேக் பொருத்தி, புல்டோசர் எந்திரம் மூலம் தள்ளப்பட்டு, தற்போது தேர் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகிறது.

Popular posts from this blog

ரா. கிருஷ்ணசாமிநாயுடு