விவசாயிகள் போராட்டம்













ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பஞ்ச நிலைமை பற்றி ரா.கிருஷ்ணசாமிநாயுடு முதலமைச்சருக்கு வேண்டுகோள்

 

1970, ஜூலை 10-ம் தேதி, விவசாய பம்புசெட்களுக்கான மின்கட்டணத்தில்  ஒரு பைசா  திமுக அரசு  உயர்த்தியதை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடந்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த  தடியடி, துப்பாக்கிச்சூடு என்று அடக்கு முறைகளைக் கையாண்டது. 

1972-ம் ஆண்டு விவசாய ஜப்தி நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாட்டு வண்டிப்போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. நாட்டில் உள்ள பிரதான சாலைகளில் வரிசையாக மாட்டு வண்டிகளை  நிறுத்தி வைத்து நடந்த இந்தப் போராட்டத்தை  அமெரிக்காவின் 

நியூயார்க் டைம் பத்திரிகை 

இந்தியா கிராமங்களின் மரபீரங்கிகள் என்று வியந்து எழுதியது. நடைபெற்ற மாட்டுவண்டி போராட்டத்தில் பங்கேற்று போராடிய விவசாயிகள் 30 ஆயிரம் பேரை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை உள்ளிட்ட மத்திய சிறைகளில் மூன்று மாதங்கள் அடைத்துவைத்து கடும் சித்திரவதை செய்தது அன்றைய அரசு. எந்த ஒரு போராட்டத்திலும் இனிமேல் பங்கேற்க மாட்டோம் என்கிற வாக்குறுதியை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டு சில விவசாயிகளை விடுதலை செய்தது. எழுதிக்கொடுக்கமாட்டோம் என்று உறுதியாக இருந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் சித்திரவதையால் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்கள்.

1970 தொடங்கி 1982-ம் ஆண்டுவரை பல்வேறு விவசாயிகள் போராட்டங்களில் பங்கேற்று, போலீஸ் அடக்குமுறைகளால் பலியான விவசாயிகள் எண்ணிக்கை 58.
விவசாயப் போராட்டங்களில் கலந்துகொண்டு உயிர்நீத்த விவசாய தியாகிகளின் நினைவைப்போற்றும் விதமாக 1982-ல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் நினைவு தினம் மற்றும் உழவர்தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு பைசா மின்கட்டண உயர்வுக்கு போராடிய விவசாயிகளை சுட்டு வீழ்த்திய அதே திமுக. அரசு பின்னாளில் அனைத்து விவசாய பம்ப் செட்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கி தன் பாவத்தைக் கழுவிக்கொண்டது.
. 


1972 ல் விவசாயிகள் ஒரு பைசா மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி நடத்திய போராட்டத்தில் நாடே வியக்கும் அளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வரலாறு காணாத அளவில் மிக பெருமளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் , இராஜபாளையம், மற்றும் சிவகாசி வட்ட பொதுமக்கள் விவசாயிகள் மாட்டுவண்டியுடன் தலைவர் ரா.கிருஷ்ணசாமிநாயுடு அவர்கள் தலைமையில் அறவழியில் துவங்கியது.ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்தது. மேலும் வந்த விவசாய பெருங்குடிமக்கள் நகருக்குள் வர இயலவில்லை.புறநகர்சாலை முழுவதும் மாட்டுவண்டியுடன் ஸ்தம்பித்து நின்றனர்.இந்நிலையில் ஆளும் கட்சியினரின் அதிகார துஸ்பிரயோகம் துவங்கியது. தி.மு.க. பிரமுகர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து பல லாரிகளில் ஆயுதங்களுடன் அடியாட்களை தறுவித்து ஸ்ரீவிலிபுத்தூர் நகருக்குள் வந்து அப்பாவி விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். தலைவர் கிருஷ்ணசாமிநாயுடு அவர்கள் தாக்கப்பட்டபோது  போலீசாரின் துணையுடன்  தொண்டர்கள் தலைவரை பாதுகாப்புடன் அவரது இல்லத்துக்கு அழைத்து சென்றனர். தி.மு.க. அமைப்பான தமிழர்படை விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியும், மாட்டுவண்டிகளை சேதப்படுத்தியும், மூடியிருந்த பல கடைகளை உடைத்து திறந்து சூறையாடியும்,ஸ்ரீவிநகர் மேலரதவீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு சூறையாடி தீக்கிரையாக்கினர் அலுவலகத்தில் மதிப்பிடமுடியாத பல ஆவணங்கள் அழிந்து போயின.மேலும் திருப்தியடையாத தி.மு.க.அமைப்பான தமிழர்படை,  ரா.கி.அவர்கள் இல்லத்திற்க்கு சென்று கொலை முயற்சியில் ஈடுபட்டனர். ரா.கி.அவர்களின் நன்பர்களும்,குடும்பத்தினரும் தலைவர் ரா.கி.அவர்களை வற்புறுத்தி மிகுந்த சிரமத்துடன் வீட்டின் புழக்கடை  வழியே பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்றனர். தலைவர் ரா.கி.அவர்கள் குடியிருந்த வாடகை இல்லத்தை   சேதப்படுத்தி சூறையாடினர் அக்காலத்தில் நவீன தொழில் நுட்பங்கள் இல்லாததால் பல உண்மை சம்பவங்கள் செய்தி ஆவணங்களில் இல்லை.

 தலைவர் ஸ்ரீ.ரா.கி. அவர்களின் நாட்குறிப்பிலிருந்து


05.06.1972 காலை 10 மணி
ரா.கி தலைமையில் 101 விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன் மறியல்.

மாலை அனைவரும் கைது செய்யப்பட்டு இரவு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்
 மூட்டைப்பூச்சி கடியால்  இரவு தூக்கமில்லை

ஜீன் மாதம் 8 ம் நாள் ஸ்ரீ ரா.கி. அவர்களின் துணைவியார் மற்றும் மகள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.

10.6.1972 குழந்தைகளுடன் கூடிய
பெண்கள் விடுதலை


ஜீன் மாதம் 14 ம் நாள் ஸ்ரீ ரா.கி. மற்றும் அவர்களின் துணைவியார் விடுதலை செய்யப்பட்டனர்.






தமிழ்நாடு விவசாயிகள் போராட்டடம் 1972 ம் ஆண்டு மே மாதம் முதல் வாரம் துவங்கி மே மாத இறுதியில் சிறை நிரப்பும் தொடர் போராட்டமாக தீவிரமடைந்தது.  

26.5.1972 கோவை மாவட்ட விவசாயிகள் மறியல் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. ரா கி அவர்கள் கோவையிலிருந்து திரும்பும் வழியில்     பயணம்  தடங்கல் ஆனது.

தமிழ்நாடு விவசாயிகள் போராட்டடம்  மேலும் தீவிரமடைந்து உச்சகட்டமாக 1972 ஜீலை மாதம் 5ம் நாள் வேலைநிறுத்த கதவடைப்பு (பந்த்) நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் காலை 10.30 மணி அளவில் தலைவர் ரா.கி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விவசாயிகள் அமைதி காத்து பல விவசாயிகள் திரும்பி சென்றனர். 12.30 மணி அளவில் தி.மு.க வினர் ஒரு வெறிகொண்ட கூட்டத்துடன் ஸ்ரீவி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடி தீவைத்து விட்டு தலைவர்  ரா.கி. யின் இல்லத்துக்கு விரைந்தனர். 01.00 மணி அளவில் போலீசாரின் பாதுகாப்பு கிட்டாமல் தலைவர்  ரா.கி.  தன் உதவியாளர்களின் துணையுடன் வீட்டின் கொல்லைப்புற வழியே வீட்டை விட்டு வெளியேறினார்.வெறிகொண்ட தி.மு.க வினர் கூட்டத்துடன் ரா.கி. யின் இல்லத்தை தாக்கி சூறையாடினர். அதே நாளில் நாடு முழுவதும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில், தி.மு.க வினரின் வன்முறையால் போலீசாரின் துப்பாக்கிசூட்டில் பல விவசாயிகள் பலியாயினர்.






கான்க: அரங்கநாதர் சன்னதி தெரு , ஸ்ரீவில்லிபுத்தூர் நினைவலைகள்





பட்டிக்காடா பட்டணமா 1972 

Popular posts from this blog

ரா. கிருஷ்ணசாமிநாயுடு